பிரம்மாண்ட வெற்றி
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படம் ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்குமே மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. ரஜினிகாந்த் அதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படம் சரியாக போகவில்லை. அதே போல் நெல்சன் அதற்கு முன்பு இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் மோசமான விமர்சனங்களை குவித்தது. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படம் இருவரின் கெரியரில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
அனிருத் கேட்ட சம்பளம்
“ஜெயிலர்” திரைப்படத்திற்கு அனிருத்தின் இசை மிகப் பெரிய பக்க பலமாக அமைந்தது. அதனை தொடர்ந்து “ஜெயிலர் 2” திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. ஆனால் அனிருத் “ஜெயிலர் 2” திரைப்படத்திற்காக ரூ.17 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் அனிரூத்திற்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக “ஜெயிலர் 2” உருவாக்கம் தாமதமாகிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.