ஏஞ்சலின்
தொகுப்பாளினி ஏஞ்சலின் சமீப காலமாக மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். மேலும் அவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்களாகவும் இருக்கின்றனர். சில மாதங்களாகவே ஒரு தனியார் யூட்யூப் சேன்னலில் நிருபராக பல சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு வருகிறார். அந்த வகையில் “விடுதலை 2” திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோரை அவர் பேட்டி கண்டிருந்தார்.

விஜய் சேதுபதி கலாய்….
அப்போது ஏஞ்சலின், “விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு செட்டுகளில் ஜாலியாக இருப்பீர்களா அல்லது இதில் வரும் கதாபாத்திரங்களை போல் சீரீயஸாக இருப்பீர்களா?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நாங்கள் கதாபாத்திரங்களை போலவே சீரீயஸாகதான் இருப்போம்” என கூற, அதன் பின் பேசத் தொடங்கிய சூரி, “நானெல்லாம் எப்போதும் கையில் துப்பாக்கியோடுதான் இருப்பேன். வாத்தியாரை (விஜய் சேதுபதி) எப்போதும் கவனித்துக்கொண்டே இருப்பேன். அவர்தான் நம்ம Target” என்று அவர் பங்கிற்கு அவரும் கலாய்த்தார். இது ஏஞ்சலினை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது.