நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் அமரன்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றில் நடித்திருக்கிறார் .
மேஜர் முகுந்த் ஆக நடித்துள்ள சிவகார்த்திகேயன் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது மனைவியாக நடிகை சாய் பல்லவி எல்லோரது கவனத்தையும் தன் நடிப்பின் மூலம் ஈர்த்துவிட்டார்.
இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது .
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு அநாகரீகமாக விமர்சனம் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஆன வலைப்பேச்சு அந்தகன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர் தான் விமர்சனம் செய்திருந்த செவ்வாய்க்கிழமை படத்தின் விமர்சன வீடியோ குறித்து பேசி ப்ளூ சட்டை மாறன்…. அதில் படத்தின் கதையை கூறிவிட்டு இணையவாசி ஒருவர் கமெண்ட் செய்ததையும் குறிப்பிட்டு பேசினார்.
அதாவது செவ்வாய்க்கிழமை படத்தின் விமர்சன வீடியோக்கு இணைவாசி ஒருவர் அப்படின்னா வரும் செவ்வாய்க்கிழமை சிவகார்த்திகேயன் செத்துப்போய்விடுவாரா? என கமெண்ட் செய்ததாக ப்ளூ சட்டை மாறன் அதில் கூறியிருந்தார் .
இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. படத்தை விமர்சனம் செய்பவர் படத்தை மட்டும் விமர்சிக்கலாம் அதை விட்டுவிட்டு தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது மிகப்பெரிய தவறு .
அது அநாகரீகமானது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இதுகுறித்து கலையரசன் தனது twitter பக்கத்தில் நேரடியாக ப்ளூ சட்டை டேக் செய்து கண்டங்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் அந்தகன் இது குறித்து பேசி இருப்பதாவது ப்ளூ சட்டை மாறன் என்னுடைய நண்பர் தான் இதனை நான் நேரடியாகவே கூறுவேன்.
இப்போது நீங்கள் கேள்வி கேட்டதால் நான் இதற்கு பதில் சொல்றேன். ஒரு படத்தை பார்க்கும்போது அனைவருக்கும் அதனை விமர்சிக்க உரிமை உண்டு.
அவரவர் பாணியில் அவரவர் விமர்சிக்கலாம். ஆனால் ஒருவர் செத்துப் போய்விடுவார் என தனிமனிதரை தாக்குதல் செய்து பேசுவது அநாகரீகம் .
இதை ப்ளூ சட்டை மாறன் அறவே தவிர்க்க வேண்டும். சிவகார்த்திகேயனை மட்டும் விமர்சிக்க வேண்டும் என நினைத்தால் அதை தனி வீடியோவாகவே அவர் பதிவிடலாம்.
ஆனால், படத்தின் விமர்சனத்தோடு அவரை இணைத்து இப்படி பேசுவது மிகப்பெரிய தவறு. மரணம் குறித்து பேசுவது மிகப்பெரிய தவறு .
அனைவருக்கும் குடும்பம் உள்ளது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதை பார்க்கும் போது மிகவும் வருத்தப்படுகிறார்கள் என்பதை யோசித்து அவர் பேசியிருக்க வேண்டும் என அந்தகன் ப்ளூ மாறனின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்.