வணங்கான் முதல் காட்சி ரத்து
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த “வணங்கான்” திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படவில்லை. இது ரசிகர்கள் பலரையும் ஏமாற்றத்துக்குள் தள்ளியது. Key Delivery Message (KDM) என்ற File கொடுக்கப்படாத பிரச்சனையால் இத்திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படவில்லை.எனினும் அடுத்தடுத்த காட்சிகள் திரையிடப்பட்டன.
நெருக்கடி கொடுத்த தயாரிப்பாளர்
இந்த நிலையில் “வணங்கான்” திரைப்படத்தின் KDM கொடுக்கப்படாததற்கு காரணம் கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் என்று கூறப்படுகிறது. அதாவது இயக்குனர் பாலா, சூர்யாவை வைத்து முதலில் “வணங்கான்” திரைப்படத்தை இயக்கி வந்தார். அந்த சமயத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலாவும் இத்திரைப்படத்தை தயாரித்து வந்தார்.

இந்த தயாரிப்பு செலவுகளுக்காக தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் பாலா ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்கியுள்ளார். இந்த நிலைமையில் பாலா, அன்புச்செழியனுக்கு ரூ.3 கோடி கொடுக்க வேண்டியதாக இருந்ததாம்.
பாலாவின் வங்கி கணக்கில் ரூ.3 கோடி இருந்தும் ஒரு நாளுக்கு ரூ.50 லட்சம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்று சம்பந்தப்பட்ட வங்கி கூறியிருக்கிறது. படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பே அன்புச்செழியன் தனது மொபைலை Switch Off செய்துவிட்டாராம். பாலா ரூ.3 கோடியை கொடுத்தப்பிறகுதான் KDM பிரச்சனை தீரும் என்ற நிலை வந்திருக்கிறது.

அன்புச்செழியனின் மேனஜர்களிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் சுமூகமான வழி கிடைக்கவில்லையாம். ஆதலால் “வணங்கான்” படம் வெளியான அன்று காலை முதல் வேலையாக பாலாவே நேரடியாக வங்கிக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி ரூ.3 கோடியை தனது வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொண்டு அன்புச்செழியனின் வங்கி கணக்கில் செலுத்தினாராம். அதன் பிறகுதான் KDM பிரச்சனை தீர்ந்திருக்கிறது.