முன்னாள் ஜனாதிபதி
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் பராக் ஒபாமா. 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இவர் ஜனாதிபதியாக இருந்த இந்த காலகட்டத்தில்தான் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த அசாதாரணமான செயல் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.
பிடித்த படங்கள்
இந்த நிலையில் பராக் ஒபாமா, தனது X பக்கத்தில் 2024 ஆம் ஆண்டு தான் பார்த்த சிறந்த திரைப்படங்களை பரிந்துரைத்துள்ளார். அதில் இந்தியாவை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய “All we imagine as light” இடம்பிடித்துள்ளது. மலையாள நடிகையான கனி கஸ்ருதி நடித்த இத்திரைப்படம் உலக சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

மூன்று பெண்களின் வாழ்க்கை பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சம்பவங்களே இத்திரைப்படத்தின் கதையாகும். இத்திரைப்படம் இதுவரை 15 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.