பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ஒரு காலகட்டத்தில் ஜொலித்து வந்தவர் அமிதாப் பச்சன். தற்போது இவர் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்களில் ஹீரோக்களில் ஒருவராகவே வலம் வருகிறார். அந்தளவுக்கு இந்திய சினிமாவில் வல்லமையுடன் வலம் வருகிறார் இவர். சமீபத்தில் தமிழில் ரஜினிகாந்தின் “வேட்டையன்” திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமிதாப் பச்சன்.

கடுப்பான அமிதாப் பச்சன்
இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சியை படமாக்கியபோது நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் மீது கோபம் கொண்ட அமிதாப் பச்சன் அவரை திட்டியது குறித்த சம்பவத்தைதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சிக்கு நடன அமைப்பாளராக இருந்தாராம் ராஜு சுந்தரம். அந்த பாடலில் அமிதாப் பச்சன் நடனமாட வேண்டிய காட்சிகள் இருந்ததால் அமிதாப் பச்சனுக்கு நடன அசைவுகளை சொல்லிக்கொடுத்தார் ராஜு சுந்தரம்.

ராஜு சுந்தரம் மிக கடுமையான நடன அசைவுகளை ஆடிக்காட்டினாராம். அதை பார்த்துக்கொண்டே இருந்த அமிதாப் பச்சன், “இங்க வா” என அவரை அருகில் கூப்பிட்டாராம். “இந்த நடன அசைவுலாம் யாருக்காக, உனக்கா எனக்கா? என் வயசு என்னனு கொஞ்சமாவது யோசிச்சி பாத்தியா?” என கேட்டாராம்.
இதனால் ராஜு சுந்தரத்தின் முகம் வாடிப்போனதாம். “என்னுடைய நடன அசைவுகளை நானே முடிவு செய்துகொள்கிறேன்” என கூறினாராம் அமிதாப் பச்சன். அதன் பின்பு அந்த நடன காட்சியை படமாக்கியபோது ராஜு சுந்தரம் என்ன நடன அசைவுகளை சொல்லிக்கொடுத்தாரோ அதனை அப்படியே ஆடினாராம் அமிதாப் பச்சன். இதனை பார்த்து படக்குழுவினர் கைத்தட்டினார்களாம்.
அதன் பின் ராஜு சுந்தரத்தை அழைத்து, “என்ன, நான் கோவிச்சிக்கிட்டேன்னு நினைச்சியா? நானும் சின்ன பையன்தான்” என கண்ணடித்துவிட்டுச் சென்றாராம்.