பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்
ஹிந்தி சினிமாவின் தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அமிதாப் பச்சன். இவர் நடித்த “ஷோலே” திரைப்படம் இப்போதும் இந்திய மக்களால் ரசித்து பார்க்கப்படும் திரைப்படமாகும். தனது 82 வயதிலும் அயராது உழைத்து வரும் அமிதாப் பச்சன் சமீபத்தில் “கல்கி”, “வேட்டையன்” போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இந்த நிலையில் அமிதாப் பச்சன் தனது தந்தைக்கு நினைவிடம் அமைப்பது குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சர்ச்சைக்குரிய பகுதி
அமிதாப் பச்சனின் தந்தையின் பெயர் ஹரிவன்ஸ் ராய் ஸ்ரீவஸ்தவா. இவர் இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிரபலமான ஹிந்தி கவிஞராக திகழ்ந்தவர். 1976 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருதை அளித்து கௌரவித்தது அன்றைய ஒன்றிய அரசு. 95 வயது வரை வாழ்ந்த இவர் 2003 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்.

இந்த நிலையில் அமிதாப் பச்சன், தனது தந்தை ஹரிவன்ஸ் ராய்க்கு அயோத்தி ராமர் கோயில் பகுதியில் ஒரு நினைவிடத்தை அமைக்க உள்ளாராம். அதாவது அயோத்தி ராமர் கோயிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 54,545 சதுர அடி கொண்ட ஒரு இடத்தை இதற்காக வாங்கியுள்ளார்களாம்.