பிளாக்பஸ்டர் ஹிட்
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் “அமரன்”. இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பாலிவுட்டிற்கு செல்லும் இயக்குனர்
இந்த நிலையில் “அமரன்” திரைப்படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான T-Series பூஷன் குமார் தயாரிக்க உள்ளார். இத்திரைப்படம் ஒரு பேன் இந்திய திரைப்படம் எனவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது T-Series நிறுவனம்.
Pan-India blockbuster brewing! ✨ Bhushan Kumar & Rajkumar Periasamy team up! ?#BhushanKumar @rajkumar_kp #KrishanKumar #ShivChanana @neerajkalyan_24 @TSeries #TSeries pic.twitter.com/LgEW5co65i
— T-Series (@TSeries) January 6, 2025