நான் ரொம்ப பிசி
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். திடீரென இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள தனுஷ் இயக்கியுள்ள “இட்லி கடை” திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

“இட்லி கடை” திரைப்படத்தை தொடர்ந்து “லப்பர் பந்து” இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது தனுஷ் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
அஸ்வத் மாரிமுத்து-அல்லு அர்ஜூன்-தனுஷ் கூட்டணி?
இந்த நிலையில் “டிராகன்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டையே அதிரவைத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பேன் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்த பிறகு தனுஷை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.