வெளியானது கேம் சேஞ்சர்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்”. இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ள நிலையில் எஸ்.தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க அரசியல் களத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியான நிலையில் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். இன்னும் பல காட்சிகள் கடந்தால்தான் இத்திரைப்படத்திற்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பது தெரிய வரும்.
ராம் சரண் VS அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த “புஷ்பா 2” திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்திய திரைப்படங்களிலேயே புதிய சாதனை படைத்துள்ளது இத்திரைப்படம். அந்த வகையில் தெலுங்கு சினிமா உலகில் ராம் சரண் ரசிகர்களுக்கும் அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கும் இடையே சிறு மோதல் நிலவுவது வழக்கம்தான். நம்மூரில் எப்படி அஜித்-விஜய்யோ அதே போல் அங்கே ராம் சரண் VS அல்லு அர்ஜூன் என்ற போக்கு உள்ளது.

தியேட்டரில் அல்லு அர்ஜூன் ரசிகர் செய்த செயல்
இந்த நிலையில் “கேம் சேஞ்சர்” திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ராம் சரணின் நடனத்தை கேலி செய்யும் விதமாக அத்திரையரங்கில் வைத்தே அல்லு அர்ஜூன் பாடல் காட்சியை தனது மொபைலில் பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு ரசிகர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக ராம் சரண் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனராம்.
Orey ??????? @AlwaysRamCharan #gamechanger pic.twitter.com/eUQzxzVSlB
— Phani Bunny Fan? (@SaiphaniSaisri1) January 10, 2025