பிசியான நடிகர்
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இவைகளை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய தகவல்கள் வேறு விதமாக வருகின்றன. அதாவது வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் தள்ளிப்போவதாகவும் அதற்கு முன்பு அட்லீ சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

திடீரென நுழைந்த அல்லு அர்ஜூன்
இந்த நிலையில் அட்லீ-சிவகார்த்திகேயன் இணையும் புராஜெக்ட்டில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் இணையவுள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “புஷ்பா 2” திரைப்படம் ரூ.2000 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.