நெகட்டிவிட்டியில் தள்ளாடும் கேம் சேஞ்சர்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள “கேம் சேஞ்சர்” திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இத்திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பே இருந்து வருகிறது. “ஷங்கர் படம் போலவே இல்லை” என ரசிகர்கள் நொந்து போயுள்ளனர். ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இத்திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பே இருந்து வருகிறது. இதனால் ராம் சரண் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கட்டம் கட்டிய பெரிய ஹீரோக்கள்
இந்த நிலையில் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற நடிகர்கள் தங்களது ரசிகர்களின் மூலம் Social Media Influencer-களுக்கும் பணம் கொடுத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப சொன்னதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

ராம் சரணும் அல்லு அர்ஜூனும் ஒரு வகையில் உறவினர்களே. ஆனாலும் வணிக போட்டி என்று வந்துவிட்டால் உறவினர் என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அல்லு அர்ஜூன் தனது ரசிகர்களின் மூலம் இவ்வாறு செய்து வருவதாக கூறுகின்றனர்.