தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வரும் நடிகை ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு 23 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்று வரை அவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஷாலினி நடிப்பில் வெளிவந்த அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, கண்ணுக்கு நிலவு , அமர்க்களம் , பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.
இன்று வரை அந்த திரைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷாலினி ஹீரோயினாக நடிப்பதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார் .
குறிப்பாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 90 படங்களில் நடித்திருப்பார் ஷாலினி. இதனிடையே அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு திரைப்பட பக்கமே வராமல் குடும்பம் குழந்தை என அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நடிகை ஷாலினி.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி 23 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவர் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரியாக இருந்து வருகிறார்.
ஷாலினியின் முழு சொத்து மதிப்பு ரூ. 350 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அஜித் தன்னுடைய மனைவியின் பெயரில்தான் பல சொத்துக்களை வாங்கிப் போட்டு இருக்கிறாராம்.
அதைப்போல் ஷாலினி ஹீரோயினாக நடிக்கும் போது ஒரு படத்திற்கு சுமார் ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் அதைக் கொண்டு அவர் சில சொத்துக்களை வாங்கி வைத்திருந்தாராம். எனவே ஷாலினி தற்போது பல கோடி சொந்தக்காரியாக இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.