விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இத்திரைப்படம் தள்ளிப்போனதாக வெளிவந்த அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
“விடாமுயற்சி” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மார்க்கெட்டை சரித்த லைகா?
“விடாமுயற்சி” திரைப்படம் தள்ளிப்போனதில் இருந்து அஜித் ரசிகர்கள் மத்தியில் லைகா நிறுவனத்தால் அஜித்தின் மார்க்கெட் சரிந்துவிட்டது என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர், “லைகா நிறுவனம் நடிகர் அஜித்தின் மார்க்கெட்டை சரித்துவிட்டுவிட்டதா?” என ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப்போனதனால் அஜித்துடைய மார்க்கெட் சரிந்துவிடுமா என்ன? பல ஆண்டுகளாக தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கி அதில் பயணித்துக்கொண்டிருப்பவர்தான் அஜித்குமார்” என்று பதில் கூறியுள்ளார்.