விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் அஜித்குமாருடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி
“விடாமுயற்சி” திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அஜித்குமார் நடித்துள்ளார். இத்திரைப்படம் 2025 ஆம் ஆண்டு கோடையை ஒட்டி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் திடீரென சில நாட்களாகவே அஜித்குமாரின் Vintage புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது அஜித்குமார் “ஆழ்வார்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அஜித்துடன் அத்திரைப்படத்தின் கதாநாயகியான அசினும் அஜித்தின் மனைவி ஷாலினியும் இடம்பெற்றிருக்கிறார். அப்புகைப்படம் இதோ….
