பேட்டியே கொடுக்காத நடிகர்
அஜித்குமார் பல ஆண்டுகளாக எந்த ஒரு பேட்டியிலும் இடம்பெறுவதில்லை. சமூக ஊடக கணக்குகள் எதுவும் அவருக்கு இல்லை. ஆதலால் அவர் ரசிகர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார். மேலும் தனது ரசிகர் மன்றத்தையும் கலைத்ததால் மிகவும் கவனிக்கத்தக்க நடிகராகவும் அஜித்குமார் திகழ்ந்து வருகிறார்.

கடவுளே அஜித்தே…
சில மாதங்களுக்கு முன் அஜித் ரசிகர்களின் மத்தியில் “கடவுளே அஜித்தே” என்ற கோஷம் மிகப் பிரபலமாக வலம் வந்தது. இதனை தொடர்ந்து தனது பெயரைச் சொல்லி அவ்வாறு கோஷம் போடாதீர்கள் என்று அஜித்தே வெளிப்படையாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அஜித்தே அப்படி சொன்னாரா?
இந்த நிலையில் சமீபத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடித்த சௌமியா பாரதி என்ற நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில் அஜித் மிகவும் இயல்பாக பழகக்கூடியவர் என குறிப்பிட்டிருந்த அவர், “முதல் நாள் படப்பிடிப்பில் நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் கொஞ்சம் சோர்வாக இருக்கையில் அமர்ந்த அஜித், ‘கடவுளே’ என்றார். அதன் பின் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே ‘அஜித்தே’ என்றார்” என குறிப்பிட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
