அஜித்தின் இரண்டாவது காதல்
அஜித்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர்தான் என்றாலும் அவர் கார் ரேஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது முதல் காதல் ஷாலினி என்றால் இரண்டாவது காதல் கார் ரேஸ் என்று கூட சொல்லலாம். சினிமாவுக்கு மூன்றாவது இடம்தான். அந்தளவுக்கு சினிமாவையும் தாண்டி கார் ரேஸில் அதிக ஈடுபாடு உடையவராக அஜித் திகழ்கிறார்.

எதிர்பாராத விபத்து
“விடாமுயற்சி”, “Good Bad Ugly” போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு அஜித்குமார் கார் ரேஸ் பயிற்சிக்காக துபாய் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன்பு கூட கார் ரேஸ் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டது. எனினும் இந்த விபத்தில் அஜித்குமாருக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை. இந்த வீடியோ கூட இணையத்தில் வைரல் ஆனது.

அஜித் விலகல்!
இந்த நிலையில் துபாயில் நடக்க உள்ள கார் ரேஸில் அஜித்குமார் கார் ஓட்டப்போவதில்லை என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சியின்போது நடந்த விபத்தின் காரணமாக அஜித்தின் நலன் கருதி அஜித்தின் கார் அணி நிர்காகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அஜித்தின் கார் ரேஸ் அணி தொடர்ந்து போட்டியிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.