ரேஸில் பிசி
“குட் பேட் அக்லீ” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் ரேஸில் பிசியாக இருக்கிறார். இந்த வருட இறுதியில்தான் அவர் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் வரைக்கும் திரைப்படங்களில் நடித்துவிட்டு மீண்டும் ரேஸிற்கு கிளம்ப உள்ளாராம் அஜித்குமார்.

தனுஷா? ஆதிக் ரவிச்சந்திரனா?

இந்த நிலையில் நடிகர் தனுஷ் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் மறுபக்கம் “குட் பேட் அக்லீ” திரைப்படம் வெற்றிபெற்றுவிட்டால் அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. தற்போது அஜித் கொடுக்கும்போது அந்த 5 மாத கால்ஷீட்டில் அவர் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.