அஜித்குமாரின் பன்முகங்கள்
அஜித்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ஆனால் அவர் நடிப்பையும் தாண்டி கார் ரேஸ், பைக் பயணம் போன்ற சாகசங்களை விடும்புபவர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அவருக்கு பைக் மற்றும் கார்களின் மீது தீரா ஆசை உண்டு. ஒரு காலகட்டத்தில் கார் ரேஸில் விபத்துக்குள்ளாகி பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்த கதைகளும் உண்டு. அதே போல் அஜித்குமாருக்கு விமானம் ஓட்டுதல், துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சியிலும் ஈடுபாடு உண்டு.

பதைபதைக்க வைக்கும் விபத்து….
“விடாமுயற்சி”,”குட் பேட் அக்லீ” போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள அஜித்குமார், துபாயில் நடைபெறும் கார் ரேஸில் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் அஜித்குமார் கார் ரேஸில் கலந்துகொண்டபோது திடீரென அவரது கார் விபத்துக்குள்ளாகி சுழன்று சுழன்று அடித்தது. இந்த வீடியோ தற்போது இணையாத்தில் வைரலாகி வரும் நிலையில் அஜித்குமார் நலமாக உள்ளாரா? என அஜித் ரசிகர்கள் பதட்டத்தில் உள்ளனர். எனினும் அஜித்குமாரின் உடல்நிலை நலமாகவே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Ajith Sir Plz don’t Take Risk ??
— Rahman (@iamrahman_offl) January 7, 2025
Praying For Speedy Recovery ❤️? @Akracingoffl
pic.twitter.com/YZzWSvOCTB