கடவுளே… அஜித்தே…
“விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் அஜித் தனது இருக்கையில் சோர்வாக அமர்கையில் “கடவுளே” என்றும் அதன் பின் அருகில் அமர்ந்திருந்த நடிகை மௌமியா பாரதியைப் பார்த்து “அஜித்தே” என்றும் நகைச்சுவையாக கூறியதாக சௌமியா பாரதி பதிவிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித்குமாருக்கு இப்படி ஒரு Humour Sense ஆ? என பலரும் வியந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இதே போல் வேறொரு சம்பவமும் நடந்திருக்கிறது.

நீங்களே அழ வைச்சிடுவீங்க போல…
அஜித்குமார் தற்போது வெளிநாட்டில் கார் பந்தயத்திற்கான ஆர்வத்தில் முழ்கியிருக்கிறார். இந்த நிலையில் அஜித்தை பல ரசிகர்கள் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் தனது குழந்தையுடன் அஜித்குமாரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
புகைப்படம் எடுக்கும்போது அந்த குழந்தை அழுதுவிடக்கூடாது என்பதற்காக கூட்டத்தில் இருந்த சிலர் அந்த குழந்தையை பார்த்து “அழுகாதே அழுகாதே” என்று சத்தமிட்டனர். அதற்கு அஜித்குமார், “நீங்களே அழ வச்சிடுவீங்க போலயே” என்று நகைச்சுவையாக கூறினார். அஜித் இவ்வாறு கூறியவுடன் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் சிரித்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.