ஏமாற்றத்துக்குள்ளான ரசிகர்கள்
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவராது என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் தலையில் இடி விழுந்தது போல் ஆனது. எனினும் “Good Bad Ugly” திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2025 ஆம் வருடம் மட்டுமே இரண்டு அஜித் திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் எடுத்த திடீர் முடிவு
அஜித்குமார் தற்போது “விடாமுயற்சி”, “Good Bad Ugly” ஆகிய இரண்டு திரைப்படங்களையும் முடித்துக்கொடுத்துவிட்டு துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் “இனி ரேஸ் நடக்கும் காலங்களில் படங்களில் நடிக்கப்போவதில்லை” எனவும் “அக்டோபர்-மார்ச்” இடைவெளியில் ஒரு படத்தில் நடிப்பேன்” எனவும் அஜித் அறிவித்துள்ளார். இத்தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.