பைக் சுற்றுலா
அஜித்குமாருக்கு சினிமா நீங்கலாக கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபாடுள்ள செய்தி பலரும் அறிந்ததே. இடையிடையே அவ்வப்போது தனது விலை உயர்ந்த பைக்கை எடுத்துக்கொண்டு உலகம் சுற்றப்போய்விடுவார் அஜித். தற்போது “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள அஜித்குமார், இனி ஒரு வருடம் துபாயில் கார் ரேஸில் ஈடுபடபோவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென எடுத்த முடிவு
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் இனி வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு திரைப்படம் என்ற ரீதியிலேயே அஜித் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இனி வருடத்திற்கு ஒரு திரைப்படத்திலாவது அஜித் நடிக்க திட்டமிட்டுள்ளது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.