எகிறும் எதிர்பார்ப்பு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். வருகிற அக்டோபர் மாதத்திற்குப் பிறகுதான் திரைத்துறைக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்-தனுஷ் கூட்டணி

இந்த நிலையில் தனுஷ் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. எனினும் அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாகவும் ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவருகிறது. இதில் எது முந்தப்போகிறது எது பிந்தப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.