குட் பேட் அக்லி
அஜித் குமார் “விடாமுயற்சி” திரைப்படத்தை தொடர்ந்து “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இத்திரைப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி வெளிவர உள்ளது.

மார்க் ஆண்டனி 2
ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்பு விஷாலை வைத்து “மார்க் ஆண்டனி” என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என விஷால் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கூறியிருக்கிறார். அந்த சமயத்தில்தான் ஆதிக்கிற்கு அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இதனை விஷாலிடம் தெரிவித்தபோது, “அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைச்சது எல்லாம் பெரிய விஷயம். நீங்கள் அஜித் படத்தை முடித்துவிட்டு வாருங்கள். அதன் பின் மார்க் ஆண்டனி இரண்டாம் பாகத்தை எடுக்கலாம்” என கூறியிருக்கிறார்.

அஜித்தின் பெருந்தன்மை
அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து “குட் பேட் அக்லி” திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரனிடம், “நாம் மீண்டும் நிச்சயமாக ஒரு படம் பண்ணலாம். ஆனால் நீங்கள் மார்க் ஆண்டனி இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டு வாருங்கள். எனக்காக உங்களை விஷால் குட் பேட் அக்லியை இயக்க அனுப்பினார் அல்லவா. அதே போல் நீங்கள் முதலில் மார்க் ஆண்டனி இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டு வாருங்கள். அதன் பின் நாம் மீண்டும் இணையலாம்” என கூறினாராம். இதன் மூலம் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் குமார் இணையவுள்ளதாக தெரிய வருகிறது.