பட்டங்களை துறந்த நடிகர்
நடிகர் அஜித்குமாரை “தல” என்றும் “அல்டிமேட் ஸ்டார்” என்றும் ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அஜித் தனது பட்டங்களை எல்லாம் துறந்தார். சமீபத்தில் கூட கடவுளே அஜித்தே என்ற கோஷம் அஜித் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் “என்னுடைய ரசிகர்கள் தயவுசெய்து அப்படி கோஷம் போட வேண்டாம்” என அஜித் அறிக்கை விட்டிருந்தார். இவ்வாறு அஜித் ஒரு தனித்துவமிக்க நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் ஷாம் நடித்து மிகவும் பிரபலமடைந்த ஒரு திரைப்படத்தில் முதலில் அஜித்குமார் நடிக்க வேண்டியது என்ற தகவலை ஷாமே ஒரு பேட்டியில் கூறியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் அஜித்தா?
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ஜீவா, ஒரு புதிய திரைப்படத்தை இயக்க தயாராக இருந்தாராம். அத்திரைப்படத்தில் நடிக்க சிம்ரன், ஜோதிகா ஆகிய இருவரையும் கதாநாயகிகளாக தேர்ந்தெடுத்திருந்தாராம். ஆனால் பல நாட்கள் ஆகியும் கதாநாயகன் கிடைக்கவில்லையாம். அஜித் இத்திரைப்படத்தில் முதலில் ஒப்பந்தமானாராம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லையாம். அதன் பின்பு மாதவன் இத்திரைப்படத்தில் ஒப்பந்தமானாராம். எனினும் அவரும் இத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.
அந்த நேரத்தில் ஷாம் ஜீவாவிடம் வாய்ப்பு கேட்டு வந்தாராம். ஷாமை பார்த்த ஜீவா “நீதான் இந்த படத்தின் ஹீரோ” என முடிவு செய்துவிட்டாராம். இவ்வாறுதான் ஷாம் “12 B” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாராம்.
