விடாமுயற்சி ரிலீஸ்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அர்ஜூன், ரெஜினா கஸிண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான “Breakdown” திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.

அஜித்தோட இமேஜே காலி?
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் பேசியபோது, “விடாமுயற்சி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி அஜித்குமாரின் இமேஜையே காலி செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “விடாமுயற்சி திரைப்படத்திற்கு பின் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க வாய்ப்பே இல்லை. அந்தளவிற்கு படப்பிடிப்பு சமயத்தில் இருவருக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டது” எனவும் கூறியுள்ளார்.