தள்ளிப்போன விடாமுயற்சி
அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்திருந்ததை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் புத்தாண்டு பிறந்தபோது லைகா அறிவித்த செய்தி அவர்களை சோகத்தில் மூழ்கடித்தது. “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவராது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

ரஜினிகாந்த் டிவிட்
இந்த நிலையில் புத்தாண்டு பிறந்தபோது ரஜினிகாந்த் தனது “X” தளத்தில் புத்தாண்டு வாழ்த்தாக “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு வாழ்த்துகள்” என பகிர்ந்திருந்தார்.

இந்த டிவிட் அஜித்தை தாக்குவது போல் இருப்பதாக கூறி அஜித் ரசிகர்கள் கடுப்பில் வலம் வந்துகொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.