இரண்டு படம் ரிலீஸ்
பல நாட்களாக வெளிவராமல் தள்ளிப்போய்க்கொண்டிருந்த “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அர்ஜூன், ரெஜினா கஸிண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் “Breakdown” என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.

அஜித்குமார் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடித்து முடித்ததோடு மட்டுமல்லாது “குட் பேட் அக்லி” திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் அஜித்குமார் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளிவருகின்றன.
தூங்காமல் ஷூட்டிங் போன அஜித்!
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்குமாரின் கடுமையான உழைப்பு குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அஜித்குமார் பகலில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடித்துவிட்டு இரவில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு செல்வார் எனவும் அந்த பயண தூரமான 2 மணி நேரம் மட்டுமே அவர் தூங்குவார், ஏறக்குறைய பத்து நாட்கள் இவ்வாறு அவர் 24 மணி நேரம் உழைத்தார் எனவும் மகிழ் திருமேனி அப்பேட்டியில் கூறியுள்ளார்.