முன்னணி நடிகை
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். முன்னணி கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு இவர் வளர்ந்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் “சங்கராந்தி வஸ்துனம்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தையை குறித்து பகிர்ந்துகொண்ட ஆச்சரியமான தகவல் சில நாட்களாக வைரலாகி வருகிறது.

என்னோட அப்பாவுக்கு Girl Fans அதிகம்!
அப்பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “என்னுடைய அப்பாவிற்கு Girl Fans அதிகம்” என்று கூறியிருந்தார். அந்த பேட்டியில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய நடிகர் என்று பல ரசிகர்கள் தெரிந்துகொண்டனர்.

ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையான ராஜேஷ், 1980களிலும் 1990களின் முற்பகுதிகளிலும் வெளிவந்த பல தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். எனினும் 1996 ஆம் ஆண்டு கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.