1994 ஆம் ஆண்டு உலகை அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு இந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைள் தேடிவந்தது. ஆரம்பத்தில் முதன் முதலில் இவர் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாகி இருந்தார் .
அது இந்திய சினிமாவுக்கே கிடைத்த பெருமை என்றே சொல்லலாம். 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
முதல் திரைப்படமே நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுக்க தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், குரு, ராவணன், எந்திரன் ,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருக்கிறார் .
இந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இதனிடையே ஹிந்தி சினிமாவின் பிரபல ஹீரோவாக இருந்து வந்த அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இவருக்கு ஆராத்யா பச்சன் என்று ஒரு மகள் இருக்கிறார். தொடர்ச்சியாக பல பேர் வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் 51 வயதாகியும் தனது மவுஸ் குறையாமல் இன்னும் மார்க்கெட்டில் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.
Also Read : நான் இப்போ சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன் – மனம் நெருடலுடன் கூறிய நாக சைதன்யா!
தொடர்ந்து ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் இன்று தனது 51 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆம், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 850 கோடி முதல் ரூ. 900 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக சொத்து மதிப்புடைய நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் மட்டும்தான் என்று கணிப்புகள் கூறுகிறது.
மும்பையில் மிகவும் ஆடம்பரமான பங்களா, பல சொகுசு கார்கள், வைரம் , வைடூரியம், தங்க நகைகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். அவரின் சொத்து மதிப்பு கேட்டதும் ரசிகர்கள் செம ஷாக் ஆகிவிட்டார்கள்.