உலக அழகி
இந்தியா சினிமாவின் பேரழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை கைப்பற்றியவர். இவரை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் சினிமாவையே சாரும். ஆம்!

1997 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “இருவர்” திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவிற்குள் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். அப்போதைய இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகையாக வலம் வந்தார் ஐஸ்வர்யா ராய். இப்போது அவருக்கு 51 வயது ஆகிறது. இப்போதும் ஐஸ்வர்யா ராயின் அழகுக்கு அவரது வயதால் எந்த பங்கமும் ஏற்படவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவது உண்டு.
இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
ஐஸ்வர்யா ராய் 2007 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு குறித்தான ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் மிக அதிக சொத்து மதிப்புடைய நடிகர் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.862 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராய். இது அவரின் கணவர் அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பை விட அதிகமாகும். அதாவது அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.280 கோடி.