நடிகர் சிவகார்த்திகேயன்:
முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்னர் நடிக்க வருவதற்கு முன்னதாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி அதில் தனது திறமைகளை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். முதன்முதலில் மெரினா திரைப்படத்தின் மூலமாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த அவர் தொடர்ந்து அடுத்த அடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார் .
அமரன் வெற்றி:
இவர் அடுத்த தளபதி விஜய் என்றெல்லாம் ரசிகர்கள் பேசும் அளவிற்கு தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.. குறிப்பாக கார்த்திகேயன் படங்களை பார்க்க குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்புவது தான் அவரது உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என கருதப்படுகிறது.

கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ள இந்த திரைப்படம் மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
மனைவி கொடுத்த பொறுப்பு:
இப்படி ஆன சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது… இப்போது படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வீட்டில் குழந்தைகள் மனைவி என குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து கொண்டிருக்கிறேன்.

என் மனைவி எனக்கு மிக முக்கியமான பொறுப்பை கொடுத்திருக்கிறார். மகன் குகனை பார்த்துக் கொள்வதுதான். என்னுடைய மகன் குகன் உடன் விளையாடுவது அவனை முழு நேரமும் பார்த்துக் கொள்வது என குழந்தைகளோடு நேரத்தை செலவழித்து வருகிறேன். இது ஒரு சிறந்த மகிழ்ச்சியான தருணங்களாக நான் பார்க்கிறேன் என்ன சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.