நடிகை அதிதி சங்கர்:
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியாகவும் வாரிசு நடிகையாகவும் அறிமுகமானவர் தான் அதிதி சங்கர். பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் மருத்துவ படிப்பு படித்திருந்தாலும் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்து தான் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் திரைப்படத்துறைக்கு நடிகையானார்.

இவரது தந்தைக்கு இவர் நடிகையாக விருப்பமே இல்லை. ஆனால் பல வருடம் காத்திருந்து அப்பாவின் பர்மிஷன் ஓட அதிதி சினிமாவில் அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து திரையுலகத்திற்கு அறிமுகமானார் .
அதிதியின் படங்கள்:
அது முதல் திரைப்படம் என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் தன்னுடைய நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார். அதை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் .

இப்படி தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகையாக மிகக் குறுகிய காலத்திலேயே பார்க்கப்பட்ட அதிதி சங்கருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இதனிடையே அவர் பிரபல வில்லன் நடிகரான அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் என்ற காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார் .
பாவாடை தாவணியில் அதிதி:
மேலும் நேசிப்பாயா என்கிற திரைப்படத்தில் அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். தொடர்ந்து இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் அதிதி சங்கர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இந்த நிலையில் தற்போது பாவாடை தாவணையில் மிகவும் ஹோம்லி அழகியாக எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அதிதி ஷங்கரின் அழகை புகழ்ந்து பாராட்டி தள்ளி இருக்கிறார்கள்.