மன வருத்தத்தை ஏற்படுத்திய கூட்டணி
சிம்பு சரிவர ஷூட்டிங் வருவதில்லை எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் அவர் மீது புகார் எழுந்த காலகட்டம் என்று ஒன்று இருந்தது. அந்த காலகட்டத்தில் சிம்பு நடித்த படம்தான் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்”. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்திந் படப்பிடிப்பிற்கு சிலம்பரசன் சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையடையாமலேயே எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் படமாக்காமல் விடுபட்டுப்போன சில காட்சிகளை அஜித் படத்தில் இணைத்து படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர்.

விட்டதை பிடித்த இயக்குனர்
அதாவது “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இதில் ஒரு சிம்புவின் கதாபாத்திரத்தை வைத்து பல காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தாராம் இயக்குனர். ஆனால் சிம்பு ஒத்துழைக்காத காரணத்தால் அக்காட்சிகள் படமாக்கப்படவில்லையாம்.

ஆதலால் அந்த கதாபாத்திரத்தை அஜித்தை வைத்து தான் இயக்கியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அக்லி கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளாராம். அதாவது அஜித் இத்திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரத்தை சிம்புவுக்காக படமாக்காமல் வைத்திருந்த காட்சிகளை அஜித்தின் கதாபாத்திரத்தோடு இணைத்து படமாக்கியுள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது.