வித்யா பிரதீப்:
திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை தான் வித்யா பிரதீப். திரைப்படங்களை தாண்டி பல்வேறு சீரியல்களிலும் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாகவும் பார்க்கப்பட்டார்.

கேரளா மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழில் சைவம் திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார். அந்த திரைப்படத்திl அம்மா கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார். அதை அடுத்து பசங்க 2 , ஒண்ணுமே புரியல, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி , மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ரகசிய திருமணம்… குழந்தை:
அவர் நடித்த நாயகி தொடர் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. வித்யா பிரதீப் ஏற்கனவே நடிகை ஆவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்தார். அதன் மூலம்தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் அவரது நடிப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அழகி சீரியலும் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனுடைய வித்யா பிரதீப் மைக்கல் என்பவருடன் திருமணம் ஆனதை சில மாதங்களுக்கு முன்னர் தான் தெரிவித்தார். அதை அடுத்து கர்ப்பமாக இருந்த வித்யா பிரதீப்பிற்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியோடு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். குழந்தையின் முகத்தை வெளிப்படையாக காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் அனைவரது கவனத்தை ஈர்த்து வாழ்த்துக்களை பெற்றுள்ளது.