இந்தியாவின் டாப் நடிகர்
பாலிவுட்டில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். சிறு வயதிலேயே சினிமாவிற்குள் நடிக்க வந்த ஆமிர்கான் கிட்டத்தட்ட 50 வருடங்களாக ஹிந்தி பட உலகில் ஜொலித்து வருகிறார். இவருக்கு இந்தியா மற்றுமல்லாது உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அக்காலகட்டத்தில் இளம்பெண்களின் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு.

தற்கொலைக்கு முயன்ற நடிகை
தமிழ் சினிமாவில் 25 வருடங்களாக பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சோனா. ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சோனா, “நான் பயங்கர ஆமிர்கான் பைத்தியம். அவருக்கு திருமணம் ஆனபோது நான் Phenyl எடுத்துக் குடித்துவிட்டேன். ஆமிர்கான் என்னை எப்படி விட்டுவிட்டு கல்யாணம் பண்ணலாம் என அழுதேன்.

எனது அம்மா சிரித்தார். நான் அப்போது 9 ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். அவருக்கு திருமணம் ஆன போது எனது இதயமே நொறுங்கிப்போனது” என இந்த சம்பவத்தை மிகவும் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார் சோனா.