கவர்ச்சி நடிகை
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று பெயர் பெற்றவர் சோனா. “பூவெல்லாம் உன் வாசம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சோனா, அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவர் தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.

தற்போது “ஸ்மோக்” என்ற ஒரு வெப் சீரீஸை இயக்கியுள்ளார். இது அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து அவர் இயக்கிய வெப் சீரீஸ் ஆகும். இவரது வாழ்க்கை பெரும் போராட்டங்களும் துயரங்களும் நிறைந்தது என பல பேட்டிகளில் இவர் கூறியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் சாய் வித் சித்ரா பேட்டியில் கலந்துகொண்ட சோனா, தான் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதை குறித்து பகிர்ந்துகொண்டார்.
தூக்கத்துக்காத்தான் எல்லாமே…
“உண்மையில் நான் குடிக்கத் தொடங்கியது தூக்கத்திற்காகத்தான். தெலுங்கில் நான் முதன்முதலில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடினேன். அந்த பாடலை படமாக்கியபோது நான் ஏதோ அசிங்கமான ஒரு செயலில் ஈடுபடுவது போல் அவ்வப்பொழுது அழுதேன். அதனால் இனி நாம் இவ்வாறு அழுகக்கூடாது என்பதற்காக அடுத்த பாடலில் குடித்துவிட்டு நடனமாடினேன். ஒரு முறை ஒரு நடன இயக்குனரிடம் சொல்லிவிட்டு ஒரு பெக் அடித்துவிட்டு வந்து நடனமாடுவது இன்னொரு பெக் அடித்துவிட்டு வந்து நடனமாடுவது என இருந்தேன்.

எனது வெட்கத்தை மறப்பதற்காக மது குடித்தேன். அதன் பின் எனது வாழ்க்கையில் பல பிரச்சனைகள் எழுந்தது. அதுவரைக்கும் நான் ஒரு Social Drinker. ஆனால் அந்த பிரச்சனைகள் வந்த பின் நிம்மதியும் போய்விட்டது தூக்கமும் போய்விட்டது. அதன் பின் தூங்குவதற்காக குடிக்கத் தொடங்கினேன். எனது அம்மா இறந்து கொஞ்ச நாள் வரைக்கும் குடித்தேன். அதன் பின் குடியை நிப்பாட்டிவிட்டேன்” என சோனா அப்பேட்டியில் மனம் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.