எஸ்.ஜே.சூர்யா படத்தின் நிலா…
எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கிய “அன்பே ஆருயிரே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நிலா. இவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா. “அன்பே ஆருயிரே” திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் “ஜாம்பவான்”, “லீ” போன்ற சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் “ஜாம்பவான்” திரைப்படத்தின் இயக்குனரான நந்தகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது நடிகை நிலா குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
மினரல் வாட்டர் வேணும்…
அதாவது “ஜாம்பவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நிலா ஒரு குளத்தில் குளிப்பது போன்ற காட்சி படமாக்கப்படுவதாக இருந்தது. அந்த காட்சிக்காகவே அந்த குளத்தில் 12,000 லிட்டர் நீர் நிரப்பப்பட்டிருந்தது. ஆனால் நிலா “இது அழுக்கு தண்ணீர், நான் இதில் குளிக்க மாட்டேன். மினரல் வாட்டரை நிரப்புங்கள்” என கூறிவிட்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து ஹோட்டல் அறைக்குச் சென்றுவிட்டாராம்.

12,000 லிட்டர் மினரல் வாட்டருக்கு அதிக செலவாகும் என்பதால் தயாரிப்பாளர்கள் நிலாவை எப்படியாவது இந்த காட்சியில் நடிக்க வைக்க சம்மதிக்க வைக்கவேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்படியும் நிலா சம்மதிக்கவில்லை. ஒரு நாள் நிலா படக்குழுவினர் யாருக்கும் தெரியாமல் அவரது சொந்த ஊரான டெல்லிக்கு போய்விட்டாராம்.
என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்க…
அவர் டெல்லிக்குச் செல்ல மதுரை விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம், “என்னை தயாரிப்பாளர்கள் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்கள்” என்று பொய்யாக புகார் கூறிவிட்டாராம். இந்த செய்தி பத்திரிக்கையில் வெளிவந்ததால் தயாரிப்பாளர்கள் மிகவும் வேதனையடைந்தார்களாம்.

அதன் பின் இயக்குனர் நந்தகுமார் பத்திரிக்கையாளர்களிடம் உண்மையை கூறிவிட்டாராம். அதனை தொடர்ந்து பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் நிலாவை படத்தில் நடிக்க சம்மதிக்க வைக்க டெல்லிக்கே புறப்பட்டுவிட்டாராம். ஆனால் அவர் டெல்லியை அடைந்தபோது நிலாவின் தந்தை அவரை மிரட்ட அடியாட்களை அனுப்பினாராம்.
அதற்கெல்லாம் பயப்படாத தியாகராஜன் நிலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒரு வழியாக நிலா அத்திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாலும் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது, வெளிநாட்டில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என கூறிவிட்டாராம். அதன் பிறகு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்றதாம்.