நடிகை அஸ்வினி…
பாரதிராஜாவின் “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அஸ்வினி. ருத்ரா என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வலம் வந்தவர் இவர். தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள “சுழல் 2” வெப் சீரீஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

தப்பாக நடந்துகொண்ட இயக்குனர்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அஸ்வினி, தன்னிடம் தவறாக நடந்துகொண்ட ஒரு இயக்குனரை குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது அவர் பதின்வயதில் இருந்தபோது ஒரு திரைப்படத்தில் நடித்து வந்தாராம். எப்போதும் படப்பிடிப்புத் தளத்திற்கு தனது தாயாருடன் செல்வாராம் அஸ்வினி. ஆனால் அன்றைய நாள் சில காரணங்களால் தாயாரால் வரமுடியவில்லையாம்.

ஆதலால் அஸ்வினி மட்டும் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை தனியே அழைத்த இயக்குனர் இவரிடம் தவறாக நடந்துகொண்டாராம். அந்த அதிர்ச்சியில் வீட்டிற்கு வந்த அஸ்வினி நாம்தான் தவறு செய்துவிட்டோம் என எண்ணி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதன் பின் அஸ்வினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை மிகவும் மன வருத்தத்துடன் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் அஸ்வினி.