சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான பொருள் செலவில் உருவாக்கி ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார் .
இந்தநிலையில் படத்தின் ப்ரோமோஷன்களில் நடிகர் சூர்யா படு பிஸியாக ஈடுபட்டு வருகிறார். அப்படி இந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் சூர்யா, தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி அழுததை பார்க்க முடிந்தது.
முன்னதாக சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை தெலுங்கில் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய படங்கள் எதுவும் திரையரங்களில் ரிலீஸ் ஆகாத நிலையில் ரசிகர்கள் தனக்காக காட்டும் அளவு கடந்த அன்பை பார்த்து கண்கலங்கி விட்டார் நடிகர் சூர்யா.
மேலும் ஆந்திர ரசிகர்களுக்கும் தனக்கும் ரத்த சம்பந்தம் இருப்பதாகவும் சூர்யா எமோஷ்னலாக பேசினார். இந்த சொந்தம் தனக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றும் தெரிவித்த சூர்யா முன்னதாக கங்குவா படத்தின் முழு படத்தை பார்த்த பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கொடுக்கும் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார் .
காட்சிகளின் பிரம்மாண்டம் , இசையின் கம்பீரம் , சூர்யாவின் ஆளுமை ஆகியவை இந்த படத்தை தூக்கி நிறுத்தி மிகச்சிறந்த படைப்பாக அமைந்துள்ளது என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பல கோடி செலவு செய்து மிகப் பெரிய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் சூர்யா ப்ரோமோஷன்களில் அழுது புலம்பி எமோஷ்னலாக பேசி தன்னுடைய குடும்பக் கதை மனைவி கதை என என்னென்னவோ சொல்லி வருகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் கடந்து சில நாட்களாகவே சூர்யா இந்த படத்திற்காகவும் பணம் சம்பாதிக்காக பணம் சம்பாதிப்பதற்காகவும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என ஒரு நடிகரின் இடத்திலிருந்து தங்களது வருத்தத்தையும் வேதனையும் தெரிவித்து வருகிறார்கள்.