நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரஜினியின் படம், ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் படம் என்பதால் இன்னும் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது.
நேற்று வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளன. ஜெய்பீம்மை நினைத்து வேட்டையனை பார்த்தால் அவ்வளவு எதிர்பார்ப்பு படத்தில் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.
தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் நடக்கக்கூடிய அவலங்களை கருத்தாக எடுத்து சொல்லக்கூடிய படம். குற்றவாளிகளுக்கு கொடுக்கக்கூடிய தவறான தண்டனைகளை பற்றி இயக்குநர் எடுத்துரைத்த விதம் அருமை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதே போல ரஜினி, ஃபகத் பாசில், அமிதாப் நடிப்பு குறித்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. படத்தை ரஜினிக்காக கமர்ஷியலா கொடுத்திருப்பதாகவும், அது படத்திற்கு செட் ஆக வில்லை. இரண்டாம் பாதி நீளம் என கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில விஜய் நடித்து வெளியான கோட் படம் உலகம் முழுவதும் இதுவரை 455 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. கோட் முதல் நாள் வசூல் ரூ.126.3 கோடி என தெரிவிக்கப்படடிருந்தது.
#Vettaiyan takes the Biggest opening for a Content oriented movie in Indian Cinema.. #Thalaivar 🔥 pic.twitter.com/xv9uyBqmEW
— Ramesh Bala (@rameshlaus) October 11, 2024
இந்த நிலையில் வேட்டையன் வெளியாகி இன்று 2வது நாளாக திரையிடப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரு நாள் வசூல் எவ்வளவு என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இது குறித்து தனது X தளப்பக்கத்தில் ரமேஷ் பாலா பதிவிட்டுள்ள போட்டோ ரசிகர்களை ஆச்சயரித்தில் ஆழ்த்தியுள்ளது. BOX OFFICE HUNTER என போஸ்டர் வெளியிட்ப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
உண்மையில் படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பது படத் தயாரிப்புக் குழு வெளியிட்டால்தான் நிஜம், அதுவரை X தளத்தில் விஜய், ரஜினி ரசிகர்கள் மோதல் நிறுத்த முடியாது என்பதும் நிஜம்.