கிளிக் ஆகாத நடிகர்
2002 ஆம் ஆண்டு தனுஷ், ஷெரின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிநய். இவர் “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தை தொடர்ந்து “ஜங்சன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சினிமாத்துறையில் அவரால் கிளிக் ஆக முடியவில்லை.
அபிநய் “துப்பாக்கி”, “அஞ்சான்” போன்ற திரைப்படங்களில் வித்யுத் ஜம்வாலுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பது பலரும் அறியாத செய்தி.

கவலைக்கிடமான நிலையில்…
இந்த நிலையில் நடிகர் அபிநய் லிவர் சிரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேல் சிகிச்சைக்கு ரூ.28 லட்சம் தேவைப்படுவதால் உதவி செய்யுமாறு உருக்கமாக பேசியுள்ளார். இச்செய்தி பல ரசிகர்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.