ஐஸ்வர்யா ராய் விவாகரத்து:
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் சமீப நாட்களாக தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால், அதை இருவருமே உறுதி செய்யவில்லை. இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாகவே ஏர்போர்ட் ;உள்ளிட்டவற்றிற்கு செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் என்று ரசிகர்கள் பேச தொடங்கி விட்டார்கள் .
இது தான் பிரச்சனை:
இந்நிலையில் முதன் முறையாக அபிஷேக் பச்சன் தனது மனைவி குறித்து மனைவியுடன் உறவு குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, எங்களது மகள் ஆரத்யாவை ஐஸ்வர்யா ராய் மிகவும் தைரியமாக பார்த்துக் கொள்வார் நன்றாக பார்த்துக் கொள்வார்.
அந்த தைரியத்தில் தான் நான் வெளியில் சென்று படங்களில் நடிக்க முடிகிறது. எனவே நான் ஐஸ்வர்யா ராய்வுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் ரொம்பவே கொடுத்து வைத்தவன். மகளுக்காக நான் எது வேண்டும் ஆனாலும் செய்வேன்.

அன்பாக பார்த்துக்கொள்ளும் ஐஸ்வர்யா ராய்:
பிள்ளைகளுக்கு தாய் செய்வதை யாராலும் ஈடுகட்ட முடியாது. தந்தையர்களை அனைத்தையும் அமைதியாக செய்வார்கள். அவர்களுக்கு அன்பை வெளிக்காட்ட தெரியாது. ஆண்களின் பெரிய பிரச்சனையை இதுதான். நான் எப்போது பிறந்தவனோ அப்போதில் இருந்தே என்னுடைய அம்மா நடிப்பை நிறுத்திவிட்டார்.
என்னையும் எனது அக்காவையும் அன்போடு பத்திரமாகவும் பார்த்துக்கொண்டார். அப்பா வீட்டில் இல்லை என்று நினைப்பை எங்களுக்கு வரவிட்டது இல்லை. அந்த அளவுக்கு என் அம்மா சிறந்த தாயாக எங்களுக்கு இருந்தார். தற்போது அதையேதான் ஐஸ்வர்யா ராயும் நடித்துக் கொண்டே தன் மகளை பார்த்துக் கொண்டு வருகிறார் என தெரிவிக்கிறார்.