Cult சினிமா…
2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இத்திரைப்படம் வெளிவந்தபோது கோலிவுட்டில் சுமாரான வரவேற்பே கிடைத்தது. ஆனால் 10 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் இத்திரைப்படத்தை Cult கிளாசிக் என்று கொண்டாடத் தொடங்கினர். இப்போதும் இத்திரைப்படத்தை Decode செய்யும் யூட்யூபர்கள் பலர் உண்டு.

ஆயிரத்தில் ஒருவன் 2
“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளிவந்தது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் என 2020 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளிவந்தது.
ஆனால் தற்போது 2025 ஆம் ஆண்டு தொடங்கியும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூட தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாகுமா? என ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் இப்போதைக்கு அத்திரைப்படம் உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை” என கூறினார். செல்வராகவன் தற்போது “7ஜி ரெயின்போ காலணி 2” திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.