தீவிரமாக களமிறங்கும் விஜய்
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். ஆதலால் தற்போது நடித்துகொண்டிருக்கும் 69 ஆவது திரைப்படத்தை முடித்துகொடுத்துவிட்டு சினிமாவை விட்டே விலக முடிவெடுத்துள்ளார். இனி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்று பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை விஜய் சந்திக்க உள்ளார். இவ்வாறு எப்போதும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் விஜய்.

பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னு!
இந்த நிலையில் வலைப்பேச்சு குழுவினருக்கு ரசிகர் ஒருவர் அனுப்பிய கேள்வி ஒன்றில், “விஜய் லியோ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சினிமாவை சினிமாவாக பாருங்கள், அது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்று பேசினார். அதன் பின் அவரது கட்சி மாநாட்டில் சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் கிடையாது, பல தலைவர்கள் உருவானதே சினிமாவில் இருந்துதான் என்று கூறினார். மாநாட்டில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார், ஆனால் அவரே ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். இவ்வாறு பேசுவது ஒன்று செய்வது ஒன்று என விஜய் இருக்கிறாரே, உண்மையில் அவரது அரசியல் நிலைப்பாடுதான் என்ன?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த வலைப்பேச்சு பிஸ்மி, “இது ஒரு மிகச்சிறந்த கேள்வி. வலைப்பேச்சு நிகழ்ச்சியை விஜய் தொடர்ந்து பார்த்து வருகிறார். நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் மக்கள் எவ்வளவு உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்று விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.