இடைக்கால தடை
“வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவிருந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதாவது இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் B4U என்ற நிறுவனத்திடம் உள்ளது. இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமம் இதுவரை விற்கப்படாத நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டை அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர். இதனால் ஓடிடி உரிமத்தை விற்க முடியவில்லை. ஆதலால் தனது B4U நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இத்திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்தார். ஆதலால் இத்திரைப்படத்தின் முதல் காட்சி இன்று திரையிடப்படவில்லை.

4 வாரங்களுக்கு தடை
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ரூ.7 கோடியை 24 மணி நேரத்திற்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை தற்போது அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம். அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு மேல் தடை விதித்தும் உள்ளது.
ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 4 வாரங்களுக்கு இத்திரைப்படத்தை தடை செய்துள்ள செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.