விக்ரம் படத்திற்கு வந்த சிக்கல்…
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இத்திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
இத்திரைப்படத்தை ரியா ஷிபு என்பவர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் B4U என்ற நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அதனால் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை எழுதிகொடுத்துவிட்டார் தயாரிப்பாளர். ஆனால் இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமம் இன்னும் விற்கப்படாத நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டை அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர்.

இந்த காரணத்தால் இத்திரைப்படத்தை ஓடிடியில் விற்கமுடியவில்லை. இதனால் தனது நிறுவனத்திற்கு 50% நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் B4U நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இத்திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால் இன்று காலை 9 மணி காட்சி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பால் இந்த சிக்கல் ஓரளவு தீர்ந்து மதிய காட்சியில் இருந்து இத்திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.