எகிறும் எதிர்பார்ப்பு
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த “கேம் சேஞ்சர்” திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் ராம் சரணின் ரசிகர்கள் பெரிதும் கவலையில் ஆழ்ந்தனர். எனினும் அவர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய ஒரு அறிவிப்பு விரைவிலேயே வெளிவந்தது. அதாவது ராம் சரணின் 16 ஆவது திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்தது.

இத்திரைப்படத்தை புஜ்ஜி பாபு சனா என்பவர் இயக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் அப்டேட்டிற்காக வெறிகொண்டு காத்துக்கொண்டிருந்தனர்.
வெளியானது டைட்டில் போஸ்டர்
இந்த நிலையில் ராம் சரணின் 16 ஆவது திரைப்படத்திற்கான டைட்டில் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்திற்கு “Peddi” என்று பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் ராம் சரண் ஒரு கேங்கஸ்டராக நடிக்க உள்ளதாக இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார். இவர்களுடன் சிவராஜ்குமார் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.