இசையமைப்பாளர் டூ ஹீரோ
விஜய் ஆண்டணி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர். அவரது பாடல்கள் பல பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்கள் ஆகும். தமிழ் சினிமா இசை உலகில் பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி “நான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். எனினும் அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து இசையில் அவர் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

திடீர் முடிவு
இந்த நிலையில் விஜய் ஆண்டனி, இனி இசையில் முழு கவனத்தை செலுத்த உள்ளதாகவும் நடிப்பை சற்று ஓரமாக வைத்துவிடவும் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளிவருகின்றது. தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் “ககன மார்கன்”, “சக்தி திருமகன்” போன்ற திரைப்படங்களை முடித்த பிறகு இனி முழு நேர இசையமைப்பாளராக மாறவுள்ளதாக கூறப்படுகிறது.