சோகத்தில் திரைத்துறையினர்
பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக காலமான செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

“தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ். “சமுத்திரம்”, “வருஷமெல்லாம் வசந்தம்” போன்ற திரைப்படங்கள் அவரது கெரியரில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பின் அவர் நடித்த திரைப்படங்கள் சரியாக போகவில்லை. ஆதலால் அவரது கெரியர் சரிவை கண்டது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனக்கவலையை பகிர்ந்துகொண்டார் மனோஜ் பாரதிராஜா.
எங்க திரும்புனாலும் முட்டுக்கட்டை…

“சினிமா துறையில் ஓடும் குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவார்கள். நான் அந்த சமயம் ஓடாத குதிரை. அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம், நமக்கு வாய்ப்புகள் வரவில்லை, இயக்குனராக முயற்சி செய்துகொண்டிருந்தேன். எங்கு திரும்பியாலும் முட்டுக்கட்டை இருந்துகொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நான் உணர்கிறேன்” என மனம் வருந்தியபடி பகிர்ந்துகொண்டார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.